காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் எம்எல்ஏ சுந்தர் முன்னிலையில், திமுகவில் மாற்று கட்சியினர் இணைந்தனர். காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம், முசரவாக்கம் கிராமத்தை சார்ந்த மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று காஞ்சிபுரம் மாவட்ட பவளவிழா மாளிகையில் நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான க.சுந்தர் கலந்துகொண்டு, மாற்றுக்கட்சி நிர்வாகிகளுக்கு திமுக வேட்டி அணிவித்து கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி சிறுவேடல் செல்வம், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், ஒன்றிய குழு தலைவர்கள் மலர்கொடிகுமார், தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமார், ஒன்றிய நிர்வாகிகள் மாரிமுத்து, இளஞ்செழியன், வேலுச்சாமி, தமிழ்செல்வன், மகேந்திரன், கார்த்திகேயன், சம்பத், தமிழரசன், முசரவாக்கம் ஊராட்சி துணை தலைவர் சங்கர், மாற்றுக்கட்சி சார்ந்த முசரவாக்கம் வார்டு உறுப்பினர் முருகன் அவர்களுடன் 25மேற்பட்டவர்கள் திமுகவில் இணைத்து கொண்டனர்.
The post சுந்தர் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் appeared first on Dinakaran.