புதுடெல்லி: விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் அவர் 9 மாதங்களுக்கு மேல் அங்கு தங்க நேரிட்டது. இதையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் கடந்த மார்ச் 19-ம் தேதி பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.