
புதுடெல்லி: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது:
இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

