கார்டூம்: சூடானில் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழந்தனர்.
சூடானின் தலைநகரான கார்ட்டூம் அருகே உள்ள ஓம்துர்மானில் உள்ள வாதி செய்த்னா ராணுவ தளத்தில் இருந்து ராணுவ விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது விமான தளத்துக்கு அருகே குடியிருப்பு பகுதிக்குள் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 46 பேர் பலியானார்கள். மேலும் சிலர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை அறியப்படவில்லை.
இந்நிலையில் ராணுவ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 46ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஓம்டுர்மனில் உள்ள கர்ராரி மாவட்டத்தில் உள்ள ஒரு பொதுமக்கள் வீட்டின் மீது விமானம் மோதியதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளதால், மக்கள் பலர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
The post சூடானில் ராணுவ விமானம் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதில் 46 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.