தலை முதல் கால் பாதம் வரை… இது விளம்பர யுகம். எந்தவொரு தொழிலை நடத்துவோரும் வருடாந்திர விளம்பரச் செலவுக்கென்று கணிசமான தொகையை வைத்து, அந்த செலவை தாங்கள் விற்கும் பொருளின் விலையில் சேர்ப்பது என்பது தவிர்க்க முடியாத ஒரு வியாபார அம்சமாகி விட்ட காலம் இது!
அந்த விளம்பரங்களில் உண்மைத்தன்மையும், நேர்மையான அணுகுமுறையும் உள்ளவரையில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால், பொருட்களையும் சேவைகளையும் சிபாரிசு செய்வதற்காக பிரபலங்களை பயன்படுத்தும் போதுதான் பல கேள்விகள் எழுகின்றன. தாங்கள் ஆர்ப்பாட்டமாக திரையில் தோன்றி தூக்கி வைத்துப்பேசும் பொருள் அல்லது சேவையின் தரம் குறித்து எந்த அளவுக்கு இந்த பிரபலங்கள் உத்தரவாதம் தர முடியும்?