புகரெஸ்ட்: கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடர் ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, போலந்து கிராண்ட் மாஸ்டரான டூடா ஜான்-கிர்ஸிஸ்டோஃபுடன் மோதினார். இந்த ஆட்டம் 32-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் தனது 6-வது சுற்றில் பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரூஸ்ஜாவுடன் மோதினார். இதில் 69-வது நகர்த்தலின் போது குகேஷ் தோல்வி அடைந்தார். 6 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தை அமெரிக்காவின் ஃபேபியானோ கருணா, பிரான்ஸின் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். குகேஷ் 2 புள்ளிகளுடன் 10 பேர் கலந்துகொண்டுள்ள தொடரில் கடைசி இடத்தில் உள்ளார்.