புகரெஸ்ட்: கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இது அவர் வென்றுள்ள முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டமாகும்.
ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் மாஸ்டர்களான பிரான்ஸின் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.