ஸாக்ரெப்: சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி குரோஷியாவின் ஸாக்ரெப் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ரேபிட் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.
கிராண்ட் செஸ் டூரில் இந்த தொடரும் ஒன்றாக உள்ளது. இதன் ரேபிட் பார்மெட் முதல் சுற்று ஆட்டத்தில் குகேஷ் தோல்வியை தழுவினார். அதன் பின்னர் நடைபெற்ற 5 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். 6-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார்.