சூரிய ஒளிவட்டத்தை ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் புரோபா-3 விண்கலத்தை, இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -எக்ஸ்எல் ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணுக்கு அனுப்புகிறது.
ஐரோப்பிய விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ விஞ்ஞானிகளும் இணைந்து சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். புரோபா-3 விண்கலத்தில் இரண்டு செயற்கைக்கோள்கள் உள்ளன. இவை ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளன. 144 மீட்டர் நீளமுள்ள இந்த விண்கலம் சோலார் கார்னோகிராப் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனின் நேரடி ஒளியைத் தடுத்து ஆய்வை மேற்கொள்ள தெளிவான பார்வையை வழங்கும். இது சூரியனின் கரோனா என்ற பிரகாசமான ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும்.