சூர்யா படக் கதையின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதாக ‘தண்டேல்’ இயக்குநர் சந்து மொண்டேட்டி தெரிவித்துள்ளார்.
‘தண்டேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தினை சந்து மொண்டேட்டி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குநர் சந்து ஆகியோர் பல பேட்டிகளில் உறுதிப்படுத்தி வருகிறார்கள்.