செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். காயார் பகுதியில் பாலமா நகரை சேர்ந்த ஹரிதாஸ், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பைக்கில் சென்றுள்ளார். அந்த வழியே வந்த கார் மோதி, பைக்கில் சென்ற 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். ஹரிதாஸ், மனைவி மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
The post செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.