செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வல்லிபுரம் ஊராட்சியில், சென்னை ஐஐடி சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிக்கும் வகையில் உரப்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு, சென்னை ஐஐடி சார்பில் ரூ.77 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, சர்வே எண் 123-ல் உள்ள நிலத்தில் ஒருபகுதியாக 9.50 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு, திட்டத்தை செயல்படுத்தவும் நிலம் தேர்வுக்கும் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், விரைவில் நவீன கட்டமைப்புகளுடன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரப்பூங்கா மற்றும் குப்பை தரம் பிரிக்கும் யார்டு அமைக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.