சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு நேற்று 2,630 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 4,360ஆக அதிகரித்துள்ளது. 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,810 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 17 கனஅடி வீதம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
The post சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.