சென்னை: ரெட் புல் நிறுவனம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் சென்னை தீவு திடல் மைதானத்தில் வரும் ஏப்ரல் 12-ம் தேதி மோட்டோ ஜாம் என்ற பெயரில் கார், பைக் சாகச நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இதில் கார் டிரிஃப்ட், பைக் ஸ்டண்ட் மற்றும் ஃப்ரீஸ்டைல் மோட்டோகிராஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் சாகசம் புரிய உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 12-ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி நரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை பார்வையாளர்கள் காண்பதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதற்கு சுமார் 4 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக ரெட் புல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பினர் சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தனர்.