சென்னை: சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உலக மாமேதை காரல் மார்க்ஸை போற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. வரலாற்றை மாற்றி அமைத்தவர்கள் சிலர்தான், அந்த சிலரில் காரல் மார்க்ஸ் ஒருவர். காரல் மார்க்ஸ் நினைவு நாளான மார்ச் 14ல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவை பற்றி மிகச்சரியாக எழுதியவர் காரல் மார்க்ஸ் என முதலமைச்சர் புகழாரம் தெரிவித்தார். உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். பி.கே.மூக்கையா தேவருக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்தார். கச்சத்தீவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவர் மூக்கையா தேவர்.
The post சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை நிறுவப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.