சென்னை: உலகின் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் சர்வதேச டபிள்யூடிடி நட்சத்திர போட்டியாளர் டேபிள் டென்னிஸ் போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறை. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்தப்போட்டியில் சர்வதேச தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்தப் போட்டியை நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது போட்டிக்கான கோப்பைகளையும் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் இந்தியன் எண்ணெய் கழகத்தின் தென் மண்டல செயல் இயக்குனர் எம்.சுதாகர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மஸ்ஸிமோ காஸ்டன்டினி, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் ஒலிம்பியன் சரத் கமல், தியா சிடால் ஆகியோர் பங்கேற்றனர்.
The post சென்னையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.