தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், சொகுசு வசதிகள் கொண்ட விலையுயர்ந்த வீடுகளுக்கான கிராக்கி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதே சமயம், சாதாரண வீடுகள் விற்பனையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை. இந்தப் போக்கு வீட்டுச் சந்தை நெருக்கடியில் இருப்பதை உணர்த்துவதாகவும், அதே சமயம் சொகுசு வீடுகளுக்கான மோகம் ஒரு புதிய போக்கு என்றும் கூறுகிறார்கள் வல்லுநர்கள். இதற்கு என்ன காரணம்?