சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை நேற்று தொடங்கியது. கடற்கரை – செங்கல்பட்டு வரை கட்டணமாக ரூ.105-ம், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை நேற்று காலை தொடங்கியது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இந்த ரயிலை சீனியர் மோட்டார்மேன் பிச்சாண்டி இயக்கினார். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், கடற்கரை – செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா 2 சேவைகளும், கடற்கரை – தாம்பரம் இடையே இருமார்க்கமாக தலா ஒரு சேவையும் இயக்கப்படுகிறது.