சென்னை: சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (மார்ச் 28) நடைபெறும் நிலையில், அன்று நள்ளிரவு 1:00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை காணச் செல்லும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.