சென்னை: பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை உள்பட 4 மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்களின் சேவை இன்று (மார்ச் 3) முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கடற்கரை – வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 650 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.