சென்னை: சென்னையை அடுத்த திருப்போரூரில் ஜப்பானை சேர்ந்த முராட்டா நிறுவனம் தனது புதிய ஆலையை அமைக்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் கெயேட்டேவை தலைமையிடமாக கொண்ட முராட்டா நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்களை தயாரித்து வருகிறது. அதன்படி உலகளாவிய அளவில் இந்நிறுவனத்தின் சாதனங்கள் ஏற்றுமதி செய்வதில் முதன்மை வகித்து வருகிறது. இந்நிறுவனமானது ஐபோன், சாம்சங், சோனி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தடம் பதிக்கும் விதமாக சென்னை அருகில் உள்ள திருப்போரூரில் முராட்டா நிறுவனம் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆலையில் பல அடுக்கு செராமிக் கெபாசிட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளது. ஓர் ஆண்டாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பயன் கிடைத்துள்ளது. இந்நிறுவனம் வருகிற 2026ம் ஆண்டில் முழு அளவிலான உற்பத்தியை மேற்கொள்ளும் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
The post சென்னையில் புதிதாக தொழிற்சாலை அமைக்கும் ஜப்பான் நிறுவனம்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் appeared first on Dinakaran.