சென்னை: சென்னையை அடுத்த வண்டலூரில் மாநகர பேருந்தில் ஏறிய முதியவரை ஓட்டுநர், நடத்துநர் சேர்ந்து தாக்கியுள்ளனர். பேருந்தில் முதியோர் இருக்கையில் அமர்ந்தவரை, நடத்துநர் இங்கே அமரக்கூடாது என கூறியதால் முதியவருக்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முதியவரை தாக்கி வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இறக்கிவிட்டுச் சென்றனர்.
The post சென்னையில் மாநகர பேருந்தில் ஏறிய முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் appeared first on Dinakaran.