சென்னை: சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி பழங்கள் எங்கேயும் இல்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்படாமல் தர்பூசணிகளை வாங்கி சாப்பிடலாம் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கோடைகாலத்தில் வெப்பத்தின் கடுமையைப் போக்கவும், உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கவும் சாப்பிடப்படும் தர்பூசணி பழங்கள் குறித்து பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. தர்பூசணி பழங்கள் இயல்பாக இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும்.