லாஸ் ஏஞ்சல்ஸ்: சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரிகா டாண்டனுக்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.
இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் கிராமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இசைத்துறைக்கான உயர்ந்த விருதாகக் கருதப்படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது.