சென்னை: சென்னை அருகே ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் சர்வதேச தரத்தில் தைவானிய தொழில்பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். இதைத்தொடர்ந்து, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்துப் பேசியதாவது: