சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று 7-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தியை சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான கார்த்திகேயன் முரளி 71-வது நகர்த்தலின் போது வீழ்த்தினார்.
உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதிய ஆட்டம் 35-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.