சென்னை புறநகரில் இயக்கப்பட்ட சர்குலர் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை புறநகரில் காஞ்சிபுரம், அரக்கோணத்துக்கு பயணிகள் ஒரே மின்சார ரயிலில் பயணிக்க வசதியாக, சர்குலர் ரயில் சேவை கடந்த 2019-ம் தேதி இயக்கப்பட்டது. இந்த ரயில், சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரைக்கு வரும்.
இந்த தடத்தில், இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டன. அதாவது, ஒரு சர்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தினசரி காலை 9.20 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னை கடற்கரையை பிற்பகல் 3.30 மணிக்கு அடைந்தது. மற்றொரு ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தினசரி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கடற்கரையை மாலை 4.35 மணிக்கு அடைந்தது. இந்த ரயில்கள் அனைத்து நாள்களிலும் இயக்கப்பட்டன.