சென்னை: சென்னை மற்றும் மதுரை – தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளில் குரலிசை, வயலின், தவில் மற்றும் புல்லாங்குழல் ஆகிய பிரிவுகளில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவுரையாளர்கள் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.தமிழ்நாடு அரசு இசை கல்லூரிகளில் காலியாகவுள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கு கலை பண்பாட்டு துறை சிறப்பு ஆட் சேர்ப்பு தேர்வினை நடத்தியது.
இந்த தேர்வில் குரலிசை பிரிவில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வி.கமல்ராஜ், வயலின் பிரிவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இரா.அமிர்தராஜ் ஆகியோருக்கு சென்னை – அரசு இசை கல்லூரியிலும், தவில் பிரிவில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஞா.குமார், புல்லாங்குழல் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரா.சுரேஷ்பாபு ஆகியோருக்கு மதுரை – அரசு இசை கல்லூரியிலும் விரிவுரையாளர்களாக தேர்வு செய்யப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று பணி நியமன ஆணைகள் வழங்கினார்.இதேபோல், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் 20 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், துறை ஆணையர் ஷோபனா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post சென்னை, மதுரை இசை கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் 4 பேருக்கு விரிவுரையாளர் பணி ஆணை: முதல்வர் வழங்கினார் appeared first on Dinakaran.