சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் அவரது புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், அவரின் அலைபேசி எண் மற்றும் அவரின் வீட்டு முகவரி போன்ற தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து சட்டம் சொல்வது என்ன? பாதிக்கப்பட்டவரின் அடையாளங்களை வெளியிட்டால் என்ன தண்டனை?