சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் மார்ச் 19-ம் தேதி ரூ.8,405 கோடிக் கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்றக் கூடத்தில் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பெரும்பாலான கவுன்சிலர்கள் வரவேற்று பேசினர். பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் பேசும்போது, சொத்து வரியை உயர்த்தியும் பற்றாக்குறை பட்ஜெட் போட்டிருப்பதாகத் தெரிவித்தார்.