சென்னை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நிலைகுழு கூட்டத்தை புறக்கணிப்பதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் குமரகுருபரன் துணை மேயர் மகேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் திமுக உறுப்பினர் சதீஷ்குமார் பேசுகையில்: மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து வார்டு குழு எடுக்கும் முடிவை நிலை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் இலை குழு ஒன்று கூடி அதை முடிவு செய்து மாமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு நிலை குழுவிலும் 15 உறுப்பினர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட நிலை குழு கூட்டங்களுக்க உயர் அதிகாரிகள் மண்டல அதிகாரிகள் வருவதில்லை எப்போது கேட்டாலும் ஆன்லைன் மீட்டிங் உள்ளது என கூறுகின்றனர் இந்த குழுவிற்கு அதிகாரிகள் கண்டிப்பாக வரவேண்டும்.
விஸ்வநாதன் நிலைக்குழு தலைவர் பேசுகையில்: நாங்கள் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணியாற்றி வருகிறோம் கடந்த காலத்தில் கல்வி பூங்கா விளையாட்டு மூன்றும் ஒரே குழுவில் இருந்தது இந்த துறையில் பூங்காக்கள் விளையாட்டு திடல்களை தனியார் ஒருவர் டெண்டர் எடுத்து சரியாக மாநகராட்சிக்கு பணம் கட்டாமல் இருந்தார் அதை அவரிடமிருந்து மீட்டு இன்று நல்ல முறையில் நடைபெறுகிறது இதற்கு காரணம் எங்கள் குழு தான் ஆணையாளருக்கு எங்கள் மீது கோபம் இருக்குமோ என்னவோ தெரியவில்லை இதனால் எங்கள் குழுவில் இருந்து பூங்காவை பிரித்து மற்ற துறைக்கு கொடுத்துள்ளார் மாற்றியுள்ளார் இதை நடைமுறைப்படுத்தக் கூடாது என பேசினார் இதே கருத்தை நிலை குழு தலைவர்கள் இளைய அருணா சிற்றரசு ஆகியோர் பேசினர் துணை மேயர் மகேஷ் குமாரும் இது குறித்து பேசினார்.
மேயர் பிரியா பேசுகையில் சென்னை மாநகராட்சியில் நாலு துணை ஆணையர் பல ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர் இங்கு பணிகள் அதிகம் என்பதால் அரசு நமக்கு ஏராளமான அதிகாரிகளை நியமித்துள்ளனர் நிலைக்குழு கூட்டங்களுக்கு கண்டிப்பாக அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் இதற்கு முன்பு என்ன நடைமுறை இருந்ததோ அதன்படி தான் நடக்க வேண்டும் கண்டிப்பாக உயர் அதிகாரிகள் குறிப்பாக ஒரு ஐஏஎஸ் அதிகாரி யாவது நிலைகுழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என பேசினார் ஜெயராமன் சிபிஎம் கவுன்சிலர் பேசுகையில் வட சென்னை பகுதியில் பல இடங்களில் சாலையில் கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டுள்ளன இதனால் விபத்துக்கள் நடைபெறுகின்றன சாலை சந்திப்புகளில் பொதுமக்கள் கடந்து செல்ல போதிய முன்னெச்சரிக்கை கோடுகள் வரையப்பட வேண்டும் என பேசினார் .
இதைத்தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பின் போது சுண்டல், பிஸ்கட், பிரட் கேக் ,வேர்க்கடலை பர்பி வாழைப்பழம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்று வாரத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு வழங்குவதற்கும் சுண்டல் பயறு வகைகள் மற்றும் சிற்றுண்டிகள் தமிழ்நாடு பனைவெல்லும் உற்பத்தியாளர் கூட்டுறவு இணைய சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்து 81 சென்னை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யவும் பள்ளி தலைமையாசிரியர் மூலமாக சுண்டல் தயார் செய்து வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பேருந்து சாலைகளில் 15 மண்டலங்களிலும் புதிய 81 நவீன 3டி மாடல் பேருந்து நிறுத்த நிழல் குடை அமைக்கும் பணிக்கு மாநகராட்சி சார்பில் ஒப்பந்தம் கோர ப்பட்டுள்ளது .குறைந்த விலைப்புள்ளி அளித்த ஒப்பந்ததாரர்களுக்கு 3d நிழற்குடை அமைக்கும் பணிகளை ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பினை முறைப்படுத்த உரிமம் பெற வேண்டும் மற்றும் மைக்ரோ சிப் பொருத்துவதை கட்டாயமாக்குதல், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி தெரியும் மாடுகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தும் வகையில் நவீன மாட்டு கொட்டைகளை அமைத்தல்உள்ளிட்ட 96 தீர்மானங்கள் இன்றைய மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
The post சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நிலைகுழு கூட்டத்தை புறக்கணிப்பதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு: மேயர், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.