சென்னை: சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநிலக் கல்லூரியில் கடந்த 2022 ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், “300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இல்லாத காரணத்தால், சிறப்பு மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வசதிகளுடன் மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு விடுதி அமைத்துத் தரப்படும்'' என்று அறிவித்தார்.