சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டிக்கெட், ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டது. போட்டி டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் தனிப்படை அமைத்து போலீஸ் சோதனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டித்தியின்போது கள்ள சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 31 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் 1 வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.53,530 பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1700 டிக்கெட்டுகளை ரூ.5000 – 10000 வரை விற்பனை செய்திருப்பதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post சென்னை – மும்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 பேர் கைது appeared first on Dinakaran.