சென்னை: தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் அக்.20 முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும், நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.