சென்னை: சென்னை வடபழனியில் சிறுவன் காரை ஒட்டி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேர்ந்த சாம் என்பவர் தனது 14 வயது மகனிடம் கடந்த 7 ஆம் தேதி மாலை கார் சாவியை கொடுத்து குமரன் நகரில் உள்ள காருக்கு கவர் போட கூறியுள்ளார். ஆனால் சிறுவன் தனது நண்பருடன் சேர்ந்து சுற்றும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென அங்கிருந்த 2 பேர் மீது மோதி அதன் பின்பாக ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் மகாலிங்கம் என்ற முதியவர் படுகாயம் அடைந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விபத்துக்கு காரணமாக இருந்த 14 வயது சிறுவன் மற்றும் அவரிடம் அலட்சியமாக சாவியை கொடுத்த அவரது தந்தை சாம் மீது வழக்குப்பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மகாலிங்கம் என்பவர் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கானது விபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தற்போது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கை மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post சென்னை வடபழனியில் சிறுவன் காரை ஒட்டி விபத்து ஏற்பட்டதில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.