சென்னை: வட இந்திய குளிர் அலை தமிழக பகுதிக்குள் நுழைவதால் தமிழகத்தில் காலை நேரத்தில் பனிமூட்டம் நீடித்து வருகிறது. இந்த மாத இறுதி வரையில் இது நீடிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுவையில் காலையில் பனி மூட்டம் காணப்படும். பகலில் வெயில் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் முழுவதுமே மூடுபனி நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கடுமையான மூடுபனி இருக்கும். அதிக குளிர் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பகலில் வெயிலை அதிகரிக்கச் செய்யும். வரும் நாட்களில் இப்படித்தான் இருக்கும். 13 ம் தேதி முதல் 15ம் தேதி வரையும், 20ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் வெயில் அதிகரித்து வறண்ட வானிலையை உருவாக்கும். அதன் தொடர்ச்சியாக மார்ச் 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் வெயில் அதிகரிக்கும். ஆனால் காலையில் பனிப் பொழிவும் பகலில் வெயில் அதிகரித்தும் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் அடர்ந்த பனி மூட்டம் நிலயவிது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடுமையான பனிமூட்டம் இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழகம் புதுவையில் வறண்ட வானிலை காணப்படும்.
ஓரிரு இடங்களில் அ திகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். காலை வேளையில் பொதுவாக பனி மூட்டம் காணப்படும். 6ம் தேதியும் இதே நிலை நீடிக்கும். 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். சென்னையில் காலையில் பனிமூட்டம் காணப்படும். பகலில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post சென்னை வானிலை மையம் அறிவிப்பு தமிழ்நாட்டில் பனிமூட்டம் நீடிக்கும் appeared first on Dinakaran.