சென்னை: கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரோசித் ராஜீவன் (31). இவர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல வழக்குகள் கோழிக்கோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. ஆனால், ரோசித் தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை வந்தது.
2 ஆண்டுகளாக, கேரள மாநிலம் கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசால் போக்சோ மற்றும் கடத்தல், பாலியல் பலாத்கார குற்றத்தில் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி ரோசித் ராஜீவன் வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்பதை கண்டுபிடித்தனர்.
விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்து, அவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அறைக்கு போலீஸ் காவலும் போடப்பட்டது. இதுபற்றி கோழிக்கோடு போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியப்படுத்தினர். இதையடுத்து கோழிக்கோடு மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார், ரோசித் ராஜீவனை கைது செய்து, கேரளா கொண்டு செல்வதற்காக, சென்னை வந்தனர்.
The post சென்னை விமான நிலையத்தில் கேரள தலைமறைவு குற்றவாளி கைது appeared first on Dinakaran.