புதுடெல்லி: செமி கண்டக்டர் மையமாக வடகிழக்கு மாநிலங்கள் உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று வடகிழக்கு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இதில் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: