மதுரை : செம்மண் எடுக்க தடை கோரிய மனுவிற்கு தென் மண்டல காவல்துறை, மதுரை ஆட்சியர் உள்ளிட்டோர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மதுரை நல்லூரில் பழமையான புதுக்குளம், புளிச்சிகுளம் கண்மாய் பகுதியில் செம்மண் எடுக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் . சட்டவிரோதமாக நடைபெறும் செம்மண் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. செம்மண் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செம்மண் எடுக்க தடை கோரிய மனுவிற்கு தென் மண்டல காவல்துறை, மதுரை ஆட்சியர் உள்ளிட்டோர் மனு குறித்து பரீசீலனை செய்து நடவடிக்கை எடுத்து பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
The post செம்மண் எடுக்க தடை கோரிய மனு: தென் மண்டல காவல்துறை, மதுரை ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.