பிகார் மாநில அமைச்சர் நிதின் நபின் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட கடிதத்தில், “பாஜக-வின் நாடாளுமன்றக் குழு, பிகார் அரசின் அமைச்சர் நிதின் நபினை கட்சியின் தேசிய செயல் தலைவராக நியமித்துள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.

