பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே நெய்க்காரப்பட்டி பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (33). பாஜ ஒன்றிய இளைஞரணி தலைவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கத்தியுடன் செல்பி எடுத்து தனது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பழநி தாலுகா போலீசார், ராஜீவ் காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் அழகர் குமார் (எ) மெட்ராஸ் குமார் (45). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளராக உள்ளார். சம்பவத்தன்று இவர் திருத்தங்கல் அண்ணா சிலை அருகே, சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும்விதமாக கையில் வாளை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிந்து நேற்றிரவு மெட்ராஸ்குமாரை கைது செய்தனர்.
The post ‘செல்பி வித் கத்தி’ பாஜ, அதிமுக நிர்வாகிகள் கைது appeared first on Dinakaran.