மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ செல்லூர் ராஜூ (அதிமுக) பேசுகையில், “மதுரை மேற்கு தொகுதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மின்சார கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும்” என்றார். அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “நீங்கள் கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம் என சொல்ல மாட்டார்கள்” என்று தெரிவித்தார். (இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது).
அமைச்சர் செந்தில்பாலாஜி: மதுரை மேற்கு தொகுதியில் 218 மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 3 புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தாழ்ந்த நிலையில் உள்ள மின்சார கம்பிகளை மாற்றியமைக்க திட்ட மதீப்பீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
The post செல்லூர் ராஜூ கேட்டால் அமைச்சர்கள் செய்ய மாட்டோம் என சொல்ல மாட்டார்கள்: சபாநாயகர் பேச்சால் சிரிப்பலை appeared first on Dinakaran.