சென்னை: செல்வப்பெருந்தகை மீதான அதிருப்தி மாவட்ட தலைவர்கள் டெல்லியில் நேற்று பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து புகார் கடிதத்தை வழங்கினர். தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக 25 மாவட்டத் தலைவர்கள் திடீரென போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று 25 மாவட்டத் தலைவர்கள் மற்றும் 2 எம்எல்ஏக்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து தங்கள் ஆதங்கத்தை கொட்டி விட நினைத்து காத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அதிருப்தியாளர்களை பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து பேசினார். அப்போது செல்வப்பெருந்தகை மீதான குற்றச்சாட்டுகளை அதிருப்தியாளர்கள் அடுக்கியதாக கூறப்படுகிறது. புகார்களை கேட்டுக் கொண்ட பிரியங்கா காந்தி, இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய பதிலை தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.இன்று ராகுல்காந்தியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். செல்வப்பெருந்தகைக்கு எதிராக தமிழக காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் வலம் வருவது காங்கிரசார் மத்தியில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
The post செல்வப்பெருந்தகை மீது அதிருப்தி பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து புகார் appeared first on Dinakaran.