ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், முலான்பூர், குவாஹாட்டி, லக்னோ, மும்பை, டெல்லி, தரம்சாலா, அகமதாபாத் ஆகிய 13 நகரங்களில் நடைபெறுகிறது.
முதல் போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது. அதேவேளையில் மற்ற 12 மைதானங்களில் நடைபெறும் முதல் போட்டியின் போது தொடக்க விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.