சேலம்: சேலத்தில் உரிய அங்கீகாரம் இன்றி பணம் இரட்டிப்பாகும் என்று கூறி முதலீடு வசூலித்து முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்துள்ளனர். மனிதநேய அறக்கட்டளை நிறுவன தலைவர் விஜயாபானு, ஜெயப்பிரதா, பாஸ்கர் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.12 கோடி ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி, 1000 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அன்னை தெரசா மகளிர் அறக்கட்டளை என்ற பெயரில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
The post சேலத்தில் உரிய அங்கீகாரம் இன்றி பணம் இரட்டிப்பாகும் என்று கூறி முதலீடு வசூலித்து முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக 3 பேர் கைது appeared first on Dinakaran.