சென்னை: சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாதது; அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ பணியாளர்கள் பணியிடங்களை நிரப்பாதது உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து வரும் 23ம் தேதி அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மேட்டூர் அணை 100 அடியை தாண்டினாலும், ஆத்தூர் வசிஷ்ட நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், ஆத்தூர் நகர மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்குகிறது. சொத்து வரி உயர்வு மற்றும் தாமதக் கட்டணமாக அபராத வரி வசூலிக்கப்படுகிறது.