சேலம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை, யாருடைய கருத்தையும் கேட்பதில்லை, என்று கூறி நிர்வாகிகள்அடுத்தடுத்து விலகி வருகின்றனர். கடந்த நவம்பர் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தங்கதுரை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், மேட்டூர் நகர துணை தலைவர் ஜீவானந்தம், தன்னுடன் பயணித்து வந்த 40 பேருடன் அக்கட்சியை விட்டு விலகுவதாக முகநூல் பக்கத்தில் அறிவித்தனர்.
நேற்று நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன், மாநகர் மாவட்ட வணிகர் பாசறை இணைசெயலாளர் வசந்தகுமார், சேலம் மேற்கு தொகுதி பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஸ்டாலின் மற்றும் தங்களுடன் பயணித்த 100க்கும் மேற்பட்ட உறவுகளும் அக்கட்சியை விட்டு விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அழகரசன் கூறுகையில், கட்சி தலைமையின் அதிருப்தியால் நானும், தன்னுடன் பயணித்த 100 உறுப்பினர்களும் விலகி உள்ளோம் என்றார்.
The post சேலம் நாதக நிர்வாகிகள் 100 பேர் திடீர் விலகல் appeared first on Dinakaran.