இந்தூர்: சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் நேற்று இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் – திரிபுரா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த திரிபுரா அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரீதம் பால் 57, ஸ்ரீனிவாஸ் 29 ரன்கள் சேர்த்தனர். குஜராத் அணி சார்பில் அர்சான் நாக்வஸ்வாலா 3, சிந்தன் கஜா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் படேலின் அதிரடியால் 10.2 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.