மதுரை: “தமிழகத்தின் கலாச்சார, விழுமியங்களை அவமதிப்பு செய்கின்றனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவரும் தமிழ்க் கலாச்சார அடையாளத்தை அழித்தொழிக்கின்றனர். பெண்களையும், சைவ, வைணவ மதத்தையும், சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதன் மூலம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ‘கம்பர் 2025 – கல்விக்கூடங்களில் கம்பர்’ எனும் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளின் நிறைவு பரிசளிப்பு விழா இன்று (ஏப்.12) நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “நேற்று பங்குனி உத்திரம், இன்று பங்குனி அஸ்தம் என மங்கலகரமான நன்நாட்கள் ஆகும். ராமனும் சீதையும் மணந்தது நேற்று, ராமனின் மிகப்பெரிய பக்தனான அனுமன் பிறந்த தினம் இன்று. மேலும் கம்பன் தனது ராமாயணத்தை உலகிற்கு அளித்த நாள் இன்று.