புதுடெல்லி: உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பவர்கள் தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் நீதிபதிகள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் எழுந்தால் அப்போதும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும். தலைமை நீதிபதியும் தனது சொத்து விவரத்தை வெளியிட வேண்டும்.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது சமீபத்தில் தெரியவந்தது. இந்நிலையில்தான் நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளனர்.